Thursday, November 15, 2007

தம்மைத் தாமே எரித்துக் கொள்பவர்கள் !

"தியாகமும் உயிர்ப்பலியும் இரண்டு விதமானவை ஒன்று குண்டடிப்பட்டும், தூக்கிலிடப்பட்டும் மரணத்தைத் தழுவுவது. இவற்றில் கவர்ச்சி அதிகமிருந்தாலும், கஷ்டம் குறைவுதான்; இரண்டாவது வாழ்க்கை பூராவும் மாளிகைச் சுமந்து கொண்டிருப்பது. போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, நமக்கு எதிரான சூழ்நிலையில் நமது தோழர்கள் ஒவ்வொருவராக நம்மை விட்டுப் போய்க் கொண்டிருக்கும்போது, நாம் ஒரு சில தேறுதல் வார்த்தைகளுக்காகத் தவிக்கிறோம். அப்படிப்பட்ட நேரங்களிலே தட்டுத்தடுமாறாமல் தமது லட்சியப் பாதையை விட்டுச் செல்லாதவரகள், மாளிகையின் சுமையால் அசைந்து கொடுக்காதவர்கள், பளுவுக்குப் பயந்து தோள்களைக் கீழே இறக்காதவர்கள், ஒளி மங்கிவிடக் கூடாதெனன்பதற்காகத் தம்மை தாமே எரித்துக் கொள்பவர்கள், தன்மையான பாதையிலே இருள் சூழ்ந்துகொள்ளக் கூடாதென்று தம்மைத் தாமே எரித்துக் கொள்பவர்கள், தம்மைத் தாமே மெழுகுவர்த்தியைப் போல் கரைத்துக்கொள்பவர்கள், உயிர்த் தியாகம் புரிபவர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் இல்லையா?"

-பகத்சிங்

Tuesday, November 13, 2007

தூக்கில் ஏறும் முன்....பகத்சிங் !


"நாளை காலை மெழுகுவர்த்தி ஒளிமங்குவது போல் நானும் மறைந்து விடுவேன்.ஆனால் நம்முடைய நம்பிக்கைகள், குறிகோள்கள் இந்த உலகத்தைப் பிரகாசிக்கச் செய்யும்.மீண்டும் பிறப்போம். மீண்டும் பிறப்போம். எண்ணற்ற இந்நாட்டு வீரர்களின் உருவில்.."

-பகத்சிங் தூக்கிலேறும்முன் தன் தம்பிக்கு எழுதிய கடிதம்

Wednesday, November 7, 2007

நவம்பர் புரட்சியில் செம்பதாகைகளின் பிரகடனங்கள் இதோ !




தொழிற்சாலைகள் தொழிலாளர்களுக்கு !


நிலம் குடியானவர்களுக்கு !


சமாதானம் உலகம் அனைத்திற்கும் !


போர் ஒழிக !


இரகசிய உடன்படிக்கைகள் ஒழிக !


முதலாளித்துவ அமைச்சர்கள் ஒழிக !

Tuesday, November 6, 2007

லெனின்கிராத் "செவ்வாய்க் களம்"

"செல்வமும் அதிகாரமும் அறிவும்
ஒரு சிலருக்கே உரித்தாயிருந்ததை எதிர்த்து
நீங்கள் போர் தொடுத்தீர்கள்;
செல்வமும் அதிகாரமும் அறிவும்
எல்லோருக்கும் உரித்தாகும் பொருட்டு
நீங்கள் புகழ்மிக்க வீர மரணம் எய்தினீர்கள்."

- லெனின்கிராத் "செவ்வாய்க் களத்தில்" அமைந்துள்ள உயிர் துறந்த புரட்சி வீரர்களின் நினைவுச் சின்னத்தின் கருங்கற் பாளங்கள் மீது பொறிக்கப் பட்டிருக்கும் வாசகம். இதை எழுதியவர் முதலாவது கல்வித்துறை மக்கள் கமிஸார் அ.வ.லுனச்சார்ஸ்கிய் (1875 -1933)

Friday, September 28, 2007

மாவீரன் பகத்சிங்

""...நாம் புகாமல் இருந்திருந்தால் புரட்சி நடவடிக்கை எதுவுமே ஆரம்பத்திராது என்று நீ கூறுகிறாயா? அப்படியென்றால், நீ நினைப்பது தவறு; சுற்றுச் சூழ்நிலையை மாற்றுவதில் பெருமளவிற்கு நாம் துணை புரிந்துள்ளோம் என்பது உண்மையானாலும் கூட நாம் நமது காலத்தினுடைய தேவையின் விளைவுதான்.'' — சிறையில் தூக்கு தண்டனைகள் விதிக்கப்பட்ட நிலையில், சுகதேவ் எழுதிய ஒரு கடிதத்திற்கு, பகத்சிங் அளித்த பதில் இது.
.......
.......
""அக்காலகட்டம் வரை நான் வெறுமனே ஒரு கற்பனாவாதப் புரட்சியாளனாகவே இருந்தேன். அது வரை நாங்கள் வெறுமனே பின்பற்றுபவர்களாக மட்டுமே இருந்தோம். இப்பொழுதோ முழுப்பொறுப்பையும் தோளில் சுமக்க வேண்டிய காலம் வந்தது. சில காலமாக ஏற்பட்ட தடுக்க முடியாத எதிர்ப்பால், கட்சி உயிரோடிருப்பதுகூட அசாத்திய மென்று தோன்றியது.... எங்களுடைய வேலைத்திட்டம் பிரயோசனமற்றதென பிற்காலத்தில் உணரக் கூடிய ஒருநாள் வரக் கூடுமோ என சில சமயங்களில் நான் பயந்ததுண்டு. எனது புரட்சிகர வாழ்க்கை யில் அது ஒரு திருப்புமுனையாகும். ""கற்றுணர்'' எனும் முழக்கமே என் மனத்தாழ்வாரங்களில் கணந்தோறும் எதிரொலித்தது...

""நான் கற்றுணரத் துவங்கினேன். என்னுடைய பழைய நம்பிக்கைகள் மாறுதலுக்குள்ளாகத் துவங்கின. எமது முந்தைய புரட்சியாளர்களிடம் பிரதானமாக விளங்கிய நம்பிக்கையின் அடிப்படையிலான வழிமுறைகள், இப்பொழுது தெளிவான, உறுதியான கருத்துக்களால் நிரப்பப்பட்டன. மாயாவாதமோ, குருட்டு நம்பிக்கையோ அல்ல, மாறாக யதார்த்தவாதமே எங்கள் வழியாயிற்று. அத்தியாவசியத் தேவையையொட்டிய பலாத்காரப் பிரயோகமே நியாயமானதாகும். அனைத்து மக்கள் இயக்கங்களுக்கும் சாத்வீகம் ஒரு விதி என்ற அடிப்படையில் இன்றியமையாததாகும். மிக முக்கியமாக, எந்த லட்சியத்திற்காக நாம் போராடுகிறோம் என்பதைக் குறித்த தெளிவான புரிதலோடிருக்க வேண்டும்.
....
....
""இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை.."
பகத்சிங்

Thursday, September 27, 2007

"ராமாயணம்" -பெரியார் தாசன்

முனிசாமி சம்சாரத்தை கந்த்சாமி தள்ளிக்கிட்டு போயிட்டான்..முனிசாமி தேடிப்போயி கந்த்சாமிய ரெண்டு சாத்து சாத்தி மறுபடியும் பொண்டாட்டிய இட்டுகினு வந்திட்டான்.. இந்தக்கத எல்லா ஊர்லயும் நடக்குது... இந்த கருமாந்திரக்கதையக் கேட்டுக்கினு நான் முனுசாமிக்கு கோவில்கட்டிக் கும்புட முடியுமா?

--- பெரியார் தாசன் பேச்சு.

Friday, September 21, 2007

'திருத்தல்வாதம்'-மாசேதுங்


"நமது அடுத்தப் பரம்பரை திருத்தல்வாதத்தில் மூழ்கி பெயரளவில் சோசலிசத்தையும் உண்மையில் முதலாளித்துவத்தையும் கொண்டிருக்குமானல் அதற்கு அடுத்த பரம்பரையினரான நம் பேரக் குழந்தைகள் அதில் நிறைவுறாமல் புரட்சியில் உறுதியாக எழுந்து நின்று தம் தந்தையினரைத் தூக்கி எறிவர்."
-மாசேதுங்

Tuesday, August 28, 2007

இந்திய பட்ஜெட் யாருக்கானது !!

கல்வித் துறைக்கு ரூ 23,142 கோடி ஒதுக்கீடு

பாதுகாப்புத் துறைக்கு ரூ 98,000 கோடி ஒதுக்கீடு

Sunday, August 26, 2007

கடவுள் மறுப்பு - பெரியார்


கடவுள் இல்லை, கடவுள் இல்லை

கடவுள் இல்லவே இல்லை

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்

பரப்பியவன் அயோக்கியன்

வணங்குகிறவன் காட்டுமிராண்டி

கடவுளை மறுக்கும் விஞ்ஞானிகள் !!

அமெரிக்காவின் Nature இதழ் (விஞ்ஞான இதழ்) எடுத்த புள்ளி விவரம்:

கடவுள் நம்பிக்கையற்ற விஞ்ஞானிகள்

1914 இல் 72 %

1993 இல் 85 %

1999 இல் 90 %

நன்றி:'ராணி', 11.7.1999

Friday, August 17, 2007

ரோஜாப் போர் (1455 - 1485)

இரண்டு ஆங்கில நிலப்பிரபுத்துவ அரச வம்சங்களிடையே அரியாசனத்துக்காக நடைபெற்ற போர்; வெள்ளை ரோஜாவைத் தம் சின்னமாக கொண்ட யார்க் வம்சத்தினருக்கும் சிவப்பு ரோஜாவைத் தம் சின்னமாகக் கொண்ட லங்காஸ்டர் வம்சத்தினருக்கும் இடையே இந்தப் போர் நடைபெற்றது.

யார்க் வம்சத்தார் நாட்டில் அதிகப் பொருளாதார வளர்ச்சி பெற்றிருந்த தென் பகுதியின் பெரிய நிலப்பிரபுக்களில் சிலரையும் மற்றும் பிரபுக் குலப் படைத்துரையினரையும் நகர மக்களையும் தமக்கு ஆதரவாகத் திரட்டிக் கொண்டார்கள்; லங்காஸ்டர் வம்சத்தார் வட திசை வட்டாரங்களைச் சேர்ந்த நிலப்பிரபுத்துவ மேன்மக்களைத் தமது ஆதரவாளர்களாகக் கொண்டிருந்தனர்.

இந்தப் போரின் விளைவாக இங்கிலாந்தின் பழைய பிரபுத்துவக் குடும்பங்கள் அனேகமாக அடியோடு அழிந்து போயின; முடிவில் புதிய டியூடர் வம்சத்தார் அரசுரிமை பெற்று இங்கிலாந்தில் எதேச்சாதிகார முடியரசை நிறுவினர்.

Thursday, August 9, 2007

"புரட்சிகர கலை இலக்கியம்" - மாவோ

புரட்சிகர கலை இலக்கியம் , உண்மையான வாழ்க்கையினின்று பல்வேறுவிதமான பாத்திர வார்ப்புகளை உருவாக்கி, வரலாற்றை முன்னெடுத்துச் செல்வதில் மக்களுக்குத் துணையாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு புறத்தில் பசி,பனி, அடக்குமுறை ஆகியவற்றின் மூலமாக துன்பங்கள் உள்ளன. இன்னொரு புறத்தில், மனிதனை மனிதன் சுரண்டி அடக்கி ஒடுக்கும் கொடுமையும் உள்ளது. இத்தகைய உண்மைகள் அனைத்து இடங்களிலும் காணப்பட்டு, பொதுவானதாக இருக்கின்றன. இத்தகைய நிகழ்ச்சிகளின் மீது எழுத்தாளர்களும் கலைஞர்களும் ஊன்றிக் கவனம் செலுத்தி, அவைகளுக்கிடையிலான முரண்பாடுகளையும் போராட்டங்களையும் வகை மாதிரிப்படுத்தி கலை இலக்கியப் படைப்புகள் வெளியிட வேண்டும்.
..
அப்படைப்புகளே மக்களின் உற்சாகத்தைத் தூண்டி, அவர்கள் ஒன்றுபட்டு, தம் சூழ்நிலையை மாற்றுவதற்கன போரட்டத்தில் ஈடுபட்டு மக்களை விழிப்படையச் செய்யும்.

மாசேதுங்
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் 3. 82

Tuesday, July 24, 2007

"வாழ்க்கைக்கு ஒரு தொழிலைத் தேர்ந்தேடுப்பது பற்றி ஓர் இளைஞனின் சிந்தனைகள்"


"ஒரு மனிதன் தனக்காகவே உழைத்து தன்னல வழியில் நடப்பானாயின் , அவன் ஒரு வேளை ஓங்கு புகழ் அறிஞனாகலாம், மாபெரும் ஞானியாகலாம், உன்னதக் கவிஞனாகலாம்; ஆனால் அவனால் ஒரு நாளும் முழுநிறைவான மனிதனாக முடியாது, உண்மையிலேயே மகத்தான மனிதனாக முடியாது..... வாழ்க்கையில் நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பாதை மனித குலத்திற்காக மிக அதிகமாய் உழைக்கும் வாய்ப்பைத் தருவதாய் இருக்குமானால், எவ்வளவு கொடிய இன்னல் வரினும் நம்மைத் தலைவணங்கச் செய்துவிட முடியாது. ஏனென்றால் அவை அனைவரின் நன்மைக்காகவும் செய்யப்படும் தியாகங்கள் ஆகும்; அப்போது நாம் அடையும் மகிழ்ச்சி அற்பத்தனமானதாய், எல்லைக்குட்பட்டதாய், தன்னலன் சார்ந்ததாய் இருக்காது.

மாறாக நாம் அடையும் மகிழ்ச்சி கோடிக்கணக்கானவர்களைச் சாரும். நமது செயல்கள் மெளனமாய் வாழ்ந்து கொண்டிருந்தாலும், நிரந்தரமாய் என்றென்றும் பயனளித்துக் கொண்டிருக்கும்; நமது சாம்பலின் மீது உன்னதமானவர்களின் கண்ணீர்த் துளிகள் சூடாய் வந்து விழும்."

-கார்ல் மார்க்ஸ்

Tuesday, July 17, 2007

"சந்தர்ப்பவாத கட்சிகள்"

"சுரண்டுபவர்களும் சுரண்டப்படுபவர்களும் கொண்ட ஒரு கூட்டுக் கதம்பம், அரசியல் சுதந்திரம் அடைவதற்கு தேவையாக இருக்கலாம், ஆனால் சுரண்டுபவர்களையும் சுரண்டப்படுபவர்களையும் கொண்ட ஒரு கட்சி சமூகத்தை மறு சீரமைக்கும் என்று சொல்வது மக்களை ஏமாற்றும் செயல்"

-டாக்டர் அம்பேத்கார்

Monday, July 16, 2007

"வர்க்கங்கள் "- குறித்து லெனின்

"வர்க்கங்கள் என்பவை வரலாற்று வழியில் நிர்ணயிக்கப்பட்ட சமூகப் பொருளுற்பத்தி அமைப்பில் அவை வகிக்கும் இடத்தாலும், உற்பத்திச் சாதனங்களுடன் அவற்றுக்குள்ள உறவாலும் (மிகப்பெரும்பாலும் இது சட்டத்தால் நிலைநிறுத்தப் பட்டு வரையறுக்கப்பட்டிருக்கிறது), உழைப்பின் சமூக ஒழுங்கமைப்பில் அவற்றுக்குள்ள பாத்திரத்தாலும், ஆகவே சமூகச் செல்வத்தில் அவற்றின் செயலாட்சிக்கு உட்படும் பங்கின் பரிமாணங்களாலும், இந்தப் பங்கை அவை தன்வயமாக்கிக் கொள்ளும் முறையினாலும் ஒன்றுக்கொன்று வேறுபடும் பெரும் மக்கள் பகுதியாகும்."

Sunday, July 15, 2007

"மார்க்சியவாதி" - லெனின்

வர்க்கப் போராட்டமே மார்க்சின் போதனையிலுள்ள பிரதான கூறாகுமென அடிக்கடி கூறப்பட்டும் எழுதப் பட்டும் வருகிறது. இது தவறு. இந்தத் தவறான கருத்தின் விளைவாய் மார்க்சியம் அடிக்கடி சந்தர்ப்பவாத வழியில் திரித்துப் புரட்டப்படுகிறது, முதலாளித்துவ வர்க்கத்தாருக்கு ஏற்புடைய பாங்கிலே பொய்யாக்கப் படுகிறது. எப்படியென்றால், வர்க்கப் போராட்டப் போதனை மார்க்சால் தோற்றுவிக்கப்பட்டது அல்ல, மார்க்சுக்கு முன்னரே முதலாளித்துவ வர்க்கத்தாரால் தோற்றுவிக்கப்பட்டது.
..
பொதுவாய்க் கூறுகையில் இது முதலாளித்துவ வர்க்கத்துக்கு ஏற்புடைய போதனையே.
..
வர்க்கப் போராட்டத்தை மட்டும் அங்கீகரிப்போர் மார்க்சியவாதிகளாகி விடுவதில்லை; இன்னமும் அவர்கள் முதலாளித்துவச் சிந்தனை, முதலாளிதுவ அரசியல் இவற்றின் வரம்புகளுக்குள் நிற்போராகவே இருக்கக் கூடும். மார்க்சியத்தை வர்க்கப் போராட்டப் போதனைக்கு அப்பால் செல்லாது இருந்தவதானது, மார்க்சியத்தைக் குறுகலாக்கித் திரித்துப் புரட்டுவதும் முதலாளித்துவ வர்க்கத்தாருக்கு ஏற்றதாய்க் குறுக்குவதுமே ஆகும். வர்க்கப் போராட்டத்தை அங்கீகரிப்பதோடு நிற்காமல் இதனைப் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்துக்கான அங்கீகரிப்பாகவும் விரித்துச் செல்கிறவர் மட்டுமே மார்க்சியவாதி ஆவார். மார்க்சியவாதிக்கும் சாதராண குட்டி (மற்றும் பெரு) முதலாளித்துவ வாதிக்கும் இடையிலுள்ள மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடு இதில் தான் அடங்கியிருக்கிறது. மார்க்சியத்தை மெய்யாகவே புரிந்து கொள்கிறாரா, அதை அங்கீகரிக்கிறாரா என்பதைச் சோதித்துப் பார்க்க உரைக்கல்லாய் அமைவது இதுவே.
- லெனின்

Friday, July 13, 2007

'கலை' - சிங்கிஸ் ஐத்மாத்தவ்

ஒரு மனிதன் தன்னிலும் மக்களிலும் சமூகத்திலும் இருக்கக்கூடிய சிறப்பான எல்லாவற்றையும் பற்றி அறியவும், நேசிக்கவும், கவலைப்படவும் செய்வதற்காக, இலக்கியம் தனது சிலுவையைத் தியாகத்தோடு எடுத்துச் செல்லவும், வாழ்வின் சிரமங்களுடன் தலையிடவும் வேண்டும். இதையே கலையின் உண்மையான நோக்கமாகக் கருதுகிறேன்.

-சிங்கிஸ் ஐத்மாத்தவ்
ரஷ்ய எழுத்தாளர்

Sunday, July 8, 2007

"தனிச் சொத்து"

"தனிச் சொத்தை நாங்கள் ஒழித்துக் கட்ட விரும்புகிறோம் என்று நீங்கள் கிலி கொண்டு பதறுகிறீர்கள். ஆனால் தற்போதுள்ள உங்களுடைய சமுதாயத்தில் பத்தில் ஒன்பது பங்கு மக்களுக்கு தனிச் சொத்து ஒழிக்கப்பட்டுவிட்டது; ஒரு சிலரிடத்தே தனிச் சொத்து இருப்பதற்கே காரணம், இந்தப் பத்தில் ஒன்பது பங்கு மக்களிடத்தே அது இல்லாது ஒழிந்ததுதான்.ஆக சமுதாயத்தில் மிகப் பெரும் பகுதியோரிடம் எந்தச் சொத்தும் இல்லாதொழிவதையே தனக்குரிய அவசிய நிபந்தனையாய்க் கொண்ட ஒரு சொத்து வடிவத்தை ஒழிக்க விரும்புறோம் என்று எங்களை ஏசுகிறீகள்....ஆம் , உண்மையில் அதுவேதான் நாங்கள் செய்ய விரும்பும் காரியம்."

-கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

Saturday, July 7, 2007

சர்வாதிகாரம்

"எதிரிகளை ஒடுக்குவதற்காகப் புரட்சியின் போது பயன்படுத்தக் கூடியதான அரசு தற்காலிக அமைப்பேயாதலால், சுதந்திரமான மக்கள் அரசு பற்றிய பேசுவது முட்டாள்தனமாகும்; பாட்டாளி வர்க்கத்திற்கு அரசு தேவைப்படுவது, அதன் எதிரிகளை ஒடுக்குவதற்காகவே அல்லாமல், விடுதலையின் நலனுக்காக அல்ல; விடுதலையைப் பற்றிய பேசுவது சாத்தியமாகும்போது இவ்வரசு நீடிக்காது போய்விடும்"
- ஏங்கெல்ஸ், கடிதமொன்றில், 28.3.1875

"படிப்பின் விரோதி"

சுய-திருப்தி என்பது படிப்பின் விரோதி. இந்தச் சுய-திருப்தி உணர்வை நம்மிடமிருந்து நீக்கினால் ஒழிய , நாம் ஒன்றையும் உண்மையாகக் கற்க முடியாது. நம்மைப் பொறுத்த வரையில் 'படிப்பில் தெவிட்டாமை' என்ற கண்ணோட்டத்தையும், பிறருக்கு 'கற்றுக் கொடுப்பதில் சளையாமை' என்ற கண்ணோட்டத்தையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.
- மாவோ

Friday, July 6, 2007

"கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை"

விஞ்ஞானக் கம்யூனிசத்தின் முதல் வேலைத்திட்ட தஸ்தவேஜீ, இது மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்சின் மாபெரும் போதனைகளின் அடிப்படைக் கோட்பாடுகள் குறித்த ஒரு முழுமையான நன்கு உருவாக்கப்பட்ட விரிவாக்கத்தை வழங்குகிறது.

"சமூதாய வாழ்க்கையெனும் அரங்கினையும் தன்னுள் கொண்டு முரணற்றதாய் அமைந்த பொருள்முதல் வாதம்; வளர்ச்சி பற்றிய மிக விரிவான மிக ஆழாமான போதனையாகிய இயக்கிவியல்; வர்க்க போராட்டத்தையும் ஒரு புதிய, கம்யூனிச சமுதாயத்தின் படைப்பாளனாகிய பாட்டாளி வர்க்கத்திற்குள்ள உலக வரலாற்று முக்கியத்துவமுடைத்த புரட்சிகரப் பாத்திரத்தையும் பற்றிய தத்துவம் - இவையாவும் அடங்கிய ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை இந்த நூல் மாமேதையருக்குரிய தெளிவோடும் ஒளிச்சுடரோடும் எடுத்துரைக்கிறது" - வி.இ.லெனின்.

"கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை" முதலாளித்துவத்தின் வீழ்ச்சியின் தவிக்கவொண்ணாத்தன்மை, பாட்டாளி வர்க்கப் புரட்சியின் வெற்றிவாகை ஆகியவற்றுக்கான விஞ்ஞான நிரூபணங்களைப் பாட்டாளி வர்க்கத்திற்கு ஆயுதமாக வழங்குவதோடு, புரட்சிகரத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் பணிகளையும் நோக்கங்களையும் வரையறுத்தது.

கம்யூனிஸ்டு சங்கத்தின் வேலைத்திட்டம் என்பதாக மார்க்ஸ் மற்றும் எங்கெல்சால் எழுதப்பட்ட இந்த அறிக்கை 1848 பிப்ரவரியில் முதன் முறையாக லண்டனில் வெளியிடப்பட்டது.