Tuesday, July 24, 2007

"வாழ்க்கைக்கு ஒரு தொழிலைத் தேர்ந்தேடுப்பது பற்றி ஓர் இளைஞனின் சிந்தனைகள்"


"ஒரு மனிதன் தனக்காகவே உழைத்து தன்னல வழியில் நடப்பானாயின் , அவன் ஒரு வேளை ஓங்கு புகழ் அறிஞனாகலாம், மாபெரும் ஞானியாகலாம், உன்னதக் கவிஞனாகலாம்; ஆனால் அவனால் ஒரு நாளும் முழுநிறைவான மனிதனாக முடியாது, உண்மையிலேயே மகத்தான மனிதனாக முடியாது..... வாழ்க்கையில் நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பாதை மனித குலத்திற்காக மிக அதிகமாய் உழைக்கும் வாய்ப்பைத் தருவதாய் இருக்குமானால், எவ்வளவு கொடிய இன்னல் வரினும் நம்மைத் தலைவணங்கச் செய்துவிட முடியாது. ஏனென்றால் அவை அனைவரின் நன்மைக்காகவும் செய்யப்படும் தியாகங்கள் ஆகும்; அப்போது நாம் அடையும் மகிழ்ச்சி அற்பத்தனமானதாய், எல்லைக்குட்பட்டதாய், தன்னலன் சார்ந்ததாய் இருக்காது.

மாறாக நாம் அடையும் மகிழ்ச்சி கோடிக்கணக்கானவர்களைச் சாரும். நமது செயல்கள் மெளனமாய் வாழ்ந்து கொண்டிருந்தாலும், நிரந்தரமாய் என்றென்றும் பயனளித்துக் கொண்டிருக்கும்; நமது சாம்பலின் மீது உன்னதமானவர்களின் கண்ணீர்த் துளிகள் சூடாய் வந்து விழும்."

-கார்ல் மார்க்ஸ்

Tuesday, July 17, 2007

"சந்தர்ப்பவாத கட்சிகள்"

"சுரண்டுபவர்களும் சுரண்டப்படுபவர்களும் கொண்ட ஒரு கூட்டுக் கதம்பம், அரசியல் சுதந்திரம் அடைவதற்கு தேவையாக இருக்கலாம், ஆனால் சுரண்டுபவர்களையும் சுரண்டப்படுபவர்களையும் கொண்ட ஒரு கட்சி சமூகத்தை மறு சீரமைக்கும் என்று சொல்வது மக்களை ஏமாற்றும் செயல்"

-டாக்டர் அம்பேத்கார்

Monday, July 16, 2007

"வர்க்கங்கள் "- குறித்து லெனின்

"வர்க்கங்கள் என்பவை வரலாற்று வழியில் நிர்ணயிக்கப்பட்ட சமூகப் பொருளுற்பத்தி அமைப்பில் அவை வகிக்கும் இடத்தாலும், உற்பத்திச் சாதனங்களுடன் அவற்றுக்குள்ள உறவாலும் (மிகப்பெரும்பாலும் இது சட்டத்தால் நிலைநிறுத்தப் பட்டு வரையறுக்கப்பட்டிருக்கிறது), உழைப்பின் சமூக ஒழுங்கமைப்பில் அவற்றுக்குள்ள பாத்திரத்தாலும், ஆகவே சமூகச் செல்வத்தில் அவற்றின் செயலாட்சிக்கு உட்படும் பங்கின் பரிமாணங்களாலும், இந்தப் பங்கை அவை தன்வயமாக்கிக் கொள்ளும் முறையினாலும் ஒன்றுக்கொன்று வேறுபடும் பெரும் மக்கள் பகுதியாகும்."

Sunday, July 15, 2007

"மார்க்சியவாதி" - லெனின்

வர்க்கப் போராட்டமே மார்க்சின் போதனையிலுள்ள பிரதான கூறாகுமென அடிக்கடி கூறப்பட்டும் எழுதப் பட்டும் வருகிறது. இது தவறு. இந்தத் தவறான கருத்தின் விளைவாய் மார்க்சியம் அடிக்கடி சந்தர்ப்பவாத வழியில் திரித்துப் புரட்டப்படுகிறது, முதலாளித்துவ வர்க்கத்தாருக்கு ஏற்புடைய பாங்கிலே பொய்யாக்கப் படுகிறது. எப்படியென்றால், வர்க்கப் போராட்டப் போதனை மார்க்சால் தோற்றுவிக்கப்பட்டது அல்ல, மார்க்சுக்கு முன்னரே முதலாளித்துவ வர்க்கத்தாரால் தோற்றுவிக்கப்பட்டது.
..
பொதுவாய்க் கூறுகையில் இது முதலாளித்துவ வர்க்கத்துக்கு ஏற்புடைய போதனையே.
..
வர்க்கப் போராட்டத்தை மட்டும் அங்கீகரிப்போர் மார்க்சியவாதிகளாகி விடுவதில்லை; இன்னமும் அவர்கள் முதலாளித்துவச் சிந்தனை, முதலாளிதுவ அரசியல் இவற்றின் வரம்புகளுக்குள் நிற்போராகவே இருக்கக் கூடும். மார்க்சியத்தை வர்க்கப் போராட்டப் போதனைக்கு அப்பால் செல்லாது இருந்தவதானது, மார்க்சியத்தைக் குறுகலாக்கித் திரித்துப் புரட்டுவதும் முதலாளித்துவ வர்க்கத்தாருக்கு ஏற்றதாய்க் குறுக்குவதுமே ஆகும். வர்க்கப் போராட்டத்தை அங்கீகரிப்பதோடு நிற்காமல் இதனைப் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்துக்கான அங்கீகரிப்பாகவும் விரித்துச் செல்கிறவர் மட்டுமே மார்க்சியவாதி ஆவார். மார்க்சியவாதிக்கும் சாதராண குட்டி (மற்றும் பெரு) முதலாளித்துவ வாதிக்கும் இடையிலுள்ள மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடு இதில் தான் அடங்கியிருக்கிறது. மார்க்சியத்தை மெய்யாகவே புரிந்து கொள்கிறாரா, அதை அங்கீகரிக்கிறாரா என்பதைச் சோதித்துப் பார்க்க உரைக்கல்லாய் அமைவது இதுவே.
- லெனின்

Friday, July 13, 2007

'கலை' - சிங்கிஸ் ஐத்மாத்தவ்

ஒரு மனிதன் தன்னிலும் மக்களிலும் சமூகத்திலும் இருக்கக்கூடிய சிறப்பான எல்லாவற்றையும் பற்றி அறியவும், நேசிக்கவும், கவலைப்படவும் செய்வதற்காக, இலக்கியம் தனது சிலுவையைத் தியாகத்தோடு எடுத்துச் செல்லவும், வாழ்வின் சிரமங்களுடன் தலையிடவும் வேண்டும். இதையே கலையின் உண்மையான நோக்கமாகக் கருதுகிறேன்.

-சிங்கிஸ் ஐத்மாத்தவ்
ரஷ்ய எழுத்தாளர்

Sunday, July 8, 2007

"தனிச் சொத்து"

"தனிச் சொத்தை நாங்கள் ஒழித்துக் கட்ட விரும்புகிறோம் என்று நீங்கள் கிலி கொண்டு பதறுகிறீர்கள். ஆனால் தற்போதுள்ள உங்களுடைய சமுதாயத்தில் பத்தில் ஒன்பது பங்கு மக்களுக்கு தனிச் சொத்து ஒழிக்கப்பட்டுவிட்டது; ஒரு சிலரிடத்தே தனிச் சொத்து இருப்பதற்கே காரணம், இந்தப் பத்தில் ஒன்பது பங்கு மக்களிடத்தே அது இல்லாது ஒழிந்ததுதான்.ஆக சமுதாயத்தில் மிகப் பெரும் பகுதியோரிடம் எந்தச் சொத்தும் இல்லாதொழிவதையே தனக்குரிய அவசிய நிபந்தனையாய்க் கொண்ட ஒரு சொத்து வடிவத்தை ஒழிக்க விரும்புறோம் என்று எங்களை ஏசுகிறீகள்....ஆம் , உண்மையில் அதுவேதான் நாங்கள் செய்ய விரும்பும் காரியம்."

-கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

Saturday, July 7, 2007

சர்வாதிகாரம்

"எதிரிகளை ஒடுக்குவதற்காகப் புரட்சியின் போது பயன்படுத்தக் கூடியதான அரசு தற்காலிக அமைப்பேயாதலால், சுதந்திரமான மக்கள் அரசு பற்றிய பேசுவது முட்டாள்தனமாகும்; பாட்டாளி வர்க்கத்திற்கு அரசு தேவைப்படுவது, அதன் எதிரிகளை ஒடுக்குவதற்காகவே அல்லாமல், விடுதலையின் நலனுக்காக அல்ல; விடுதலையைப் பற்றிய பேசுவது சாத்தியமாகும்போது இவ்வரசு நீடிக்காது போய்விடும்"
- ஏங்கெல்ஸ், கடிதமொன்றில், 28.3.1875

"படிப்பின் விரோதி"

சுய-திருப்தி என்பது படிப்பின் விரோதி. இந்தச் சுய-திருப்தி உணர்வை நம்மிடமிருந்து நீக்கினால் ஒழிய , நாம் ஒன்றையும் உண்மையாகக் கற்க முடியாது. நம்மைப் பொறுத்த வரையில் 'படிப்பில் தெவிட்டாமை' என்ற கண்ணோட்டத்தையும், பிறருக்கு 'கற்றுக் கொடுப்பதில் சளையாமை' என்ற கண்ணோட்டத்தையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.
- மாவோ

Friday, July 6, 2007

"கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை"

விஞ்ஞானக் கம்யூனிசத்தின் முதல் வேலைத்திட்ட தஸ்தவேஜீ, இது மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்சின் மாபெரும் போதனைகளின் அடிப்படைக் கோட்பாடுகள் குறித்த ஒரு முழுமையான நன்கு உருவாக்கப்பட்ட விரிவாக்கத்தை வழங்குகிறது.

"சமூதாய வாழ்க்கையெனும் அரங்கினையும் தன்னுள் கொண்டு முரணற்றதாய் அமைந்த பொருள்முதல் வாதம்; வளர்ச்சி பற்றிய மிக விரிவான மிக ஆழாமான போதனையாகிய இயக்கிவியல்; வர்க்க போராட்டத்தையும் ஒரு புதிய, கம்யூனிச சமுதாயத்தின் படைப்பாளனாகிய பாட்டாளி வர்க்கத்திற்குள்ள உலக வரலாற்று முக்கியத்துவமுடைத்த புரட்சிகரப் பாத்திரத்தையும் பற்றிய தத்துவம் - இவையாவும் அடங்கிய ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை இந்த நூல் மாமேதையருக்குரிய தெளிவோடும் ஒளிச்சுடரோடும் எடுத்துரைக்கிறது" - வி.இ.லெனின்.

"கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை" முதலாளித்துவத்தின் வீழ்ச்சியின் தவிக்கவொண்ணாத்தன்மை, பாட்டாளி வர்க்கப் புரட்சியின் வெற்றிவாகை ஆகியவற்றுக்கான விஞ்ஞான நிரூபணங்களைப் பாட்டாளி வர்க்கத்திற்கு ஆயுதமாக வழங்குவதோடு, புரட்சிகரத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் பணிகளையும் நோக்கங்களையும் வரையறுத்தது.

கம்யூனிஸ்டு சங்கத்தின் வேலைத்திட்டம் என்பதாக மார்க்ஸ் மற்றும் எங்கெல்சால் எழுதப்பட்ட இந்த அறிக்கை 1848 பிப்ரவரியில் முதன் முறையாக லண்டனில் வெளியிடப்பட்டது.