இரண்டு ஆங்கில நிலப்பிரபுத்துவ அரச வம்சங்களிடையே அரியாசனத்துக்காக நடைபெற்ற போர்; வெள்ளை ரோஜாவைத் தம் சின்னமாக கொண்ட யார்க் வம்சத்தினருக்கும் சிவப்பு ரோஜாவைத் தம் சின்னமாகக் கொண்ட லங்காஸ்டர் வம்சத்தினருக்கும் இடையே இந்தப் போர் நடைபெற்றது.
யார்க் வம்சத்தார் நாட்டில் அதிகப் பொருளாதார வளர்ச்சி பெற்றிருந்த தென் பகுதியின் பெரிய நிலப்பிரபுக்களில் சிலரையும் மற்றும் பிரபுக் குலப் படைத்துரையினரையும் நகர மக்களையும் தமக்கு ஆதரவாகத் திரட்டிக் கொண்டார்கள்; லங்காஸ்டர் வம்சத்தார் வட திசை வட்டாரங்களைச் சேர்ந்த நிலப்பிரபுத்துவ மேன்மக்களைத் தமது ஆதரவாளர்களாகக் கொண்டிருந்தனர்.
இந்தப் போரின் விளைவாக இங்கிலாந்தின் பழைய பிரபுத்துவக் குடும்பங்கள் அனேகமாக அடியோடு அழிந்து போயின; முடிவில் புதிய டியூடர் வம்சத்தார் அரசுரிமை பெற்று இங்கிலாந்தில் எதேச்சாதிகார முடியரசை நிறுவினர்.
No comments:
Post a Comment