"ஒரு மனிதன் தனக்காகவே உழைத்து தன்னல வழியில் நடப்பானாயின் , அவன் ஒரு வேளை ஓங்கு புகழ் அறிஞனாகலாம், மாபெரும் ஞானியாகலாம், உன்னதக் கவிஞனாகலாம்; ஆனால் அவனால் ஒரு நாளும் முழுநிறைவான மனிதனாக முடியாது, உண்மையிலேயே மகத்தான மனிதனாக முடியாது..... வாழ்க்கையில் நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பாதை மனித குலத்திற்காக மிக அதிகமாய் உழைக்கும் வாய்ப்பைத் தருவதாய் இருக்குமானால், எவ்வளவு கொடிய இன்னல் வரினும் நம்மைத் தலைவணங்கச் செய்துவிட முடியாது. ஏனென்றால் அவை அனைவரின் நன்மைக்காகவும் செய்யப்படும் தியாகங்கள் ஆகும்; அப்போது நாம் அடையும் மகிழ்ச்சி அற்பத்தனமானதாய், எல்லைக்குட்பட்டதாய், தன்னலன் சார்ந்ததாய் இருக்காது.
மாறாக நாம் அடையும் மகிழ்ச்சி கோடிக்கணக்கானவர்களைச் சாரும். நமது செயல்கள் மெளனமாய் வாழ்ந்து கொண்டிருந்தாலும், நிரந்தரமாய் என்றென்றும் பயனளித்துக் கொண்டிருக்கும்; நமது சாம்பலின் மீது உன்னதமானவர்களின் கண்ணீர்த் துளிகள் சூடாய் வந்து விழும்."
-கார்ல் மார்க்ஸ்
No comments:
Post a Comment